ஹக்கீம் - சம்பிக்க - மனோ சஜித்தின் 'இதயத்தில்' சங்கமம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 12 February 2020

ஹக்கீம் - சம்பிக்க - மனோ சஜித்தின் 'இதயத்தில்' சங்கமம்

https://www.photojoiner.net/image/zTYftWvA

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சஜித் பிரேமதாசவினால் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியில் தாமும் தமது கட்சிகளும் இணைந்து கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், ஜாதிக ஹெல உறுமய தலைவர் பாட்டாளி சம்பிக்க ரணவக்கம மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.



ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளரான சஜித் பிரேமதாச இவ்வாறு பிரத்யேக கூட்டணியை உருவாக்கியுள்ள அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக அக்கட்சி தெரிவித்து வருகிறது.

இதேவேளை, மஹிந்த தரப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment