இலவச விசா திட்டம் ஏப்ரல் இறுதி வரை நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 13 February 2020

இலவச விசா திட்டம் ஏப்ரல் இறுதி வரை நீடிப்பு

BrD2XMb

அமெரிக்கா, ஐரோப்பா உட்பட அபிவிருத்தியடைந்த நாடுகளின் பிரஜைகளுக்கு இலங்கை வருவதற்கு வழங்கப்பட்ட இலவச விசா திட்டத்தினை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.



இதனடிப்படையில் ஏப்ரல் இறுதி வரை 48 நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கு இலங்கை வருவதற்கு இலவச விசா வழங்கல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்பவென அறிமுகப்படுத்தப்பட்ட குறித்த திட்டத்தினை ஆரம்பத்தில் நடைமுறை அரசு கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment