கருணா - பிள்ளையான் வன்முறையைத் தூண்ட முஸ்தீபு! - sonakar.com

Post Top Ad

Friday, 1 November 2019

கருணா - பிள்ளையான் வன்முறையைத் தூண்ட முஸ்தீபு!


கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் வன்முறையைத் தூண்டி விடுவதற்கு கருணா - பிள்ளையான் குழு முயற்சி செய்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் முறையிட்டுள்ளது.இலங்கையின் தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய குழுவினருடன் [European Union Election Observation Mission (EU EOM)] இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே மு.கா தரப்பில் இவ்வாறு முறையிடப்பட்டுள்ளதுடன் சஜித் பிரேமதாசவின் வெற்றியைத் தடுக்கும் வகையில் தேர்தல் தினம் பாரிய வன்முறைகளைத் தூண்டுவதற்கு இக்குழு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் இனவாத பிரச்சாரங்களின் அடிப்படையில் அரசியல் செய்து வரும் கருணா அம்மான் கோட்டாபே ராஜபக்சவுக்கு ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment