வதை முகாம் நடாத்தி வந்த ஒலு மராவின் சகா கைது! - sonakar.com

Post Top Ad

Friday, 1 November 2019

வதை முகாம் நடாத்தி வந்த ஒலு மராவின் சகா கைது!

UNVYf5o

வென்னப்புவ பகுதி வீடொன்றில் வதை முகாம் ஒன்றை நடாத்தி வந்த ரன் சாமர என அறியப்படும் பாதாள உலக பேர்வழி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


பிரபல பாதாள உலக பேர்வழி ஒலு மராவின் சகாவான குறித்த நபர், ஆட்களைக் கடத்தி வந்து தமது கோரிக்கைகளுக்குப் பணியாத போது தலை கீழாகக் கட்டி வைத்து அடிப்பது, முழங்காலில் நிற்க வைத்து வதைப்பது மற்றும் கொடூரமான வதைகளை செய்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றன.

சர்வதேச மட்டத்தில் இலங்கையில் தொடர்ந்தும் இராணுவ வதை முகாம்கள் இருப்பதாக குற்றச்சாட்டு நிலவி வருகின்ற நிலையில் இவ்வாறு பாதாள உலக பேர்வழிகளின் வதை முகாம்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment