இலங்கைக்கான அமெரிக்க தூதர் போகும் இடமெல்லாம் ISIS: விமல் வீரவன்ச! - sonakar.com

Post Top Ad

Friday, 3 May 2019

இலங்கைக்கான அமெரிக்க தூதர் போகும் இடமெல்லாம் ISIS: விமல் வீரவன்ச!


இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலெய்னா டெப்லிட்ஸ் இதற்கு முன் பணியாற்றிய அனைத்து நாடுகளிலும் ஐ.எஸ் - தலிபான் மற்றும் அல்கயீதா சிக்கல்களே மலிந்திருந்ததாகவும் அதன் பின்னணியில் அந்நாடுகளில் அமெரிக்கா நிலை கொள்ள ஆரம்பித்ததாகவும் தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.


அலெய்னா இதற்கு முன்னர் ஆப்கனிஸ்தான், லிபியா போன்ற நாடுகளில் இவ்வாறான காலகட்டங்களில் தூதராக இருந்ததோடு அப்போதே அமெரிக்க படையினர் ஊடுருவ ஆரம்பித்ததாகவும் விமல் தெரிவிப்பதோடு இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்களும் ஒருவகையில் அமெரிக்க படையினர் இலங்கைக்குள் வருவதற்கான முன்னேற்பாடே என தெரிவித்து வருகிறார்.

இதனூடாக இலங்கையை இன்னொரு சிரியாவாக மாற்றுவதே அமெரிக்காவின் திட்டம் என விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment