2 வருடங்களுக்கு முன்னரே தொடர்பறுந்து விட்டது: CTJ விளக்கம் - sonakar.com

Post Top Ad

Friday, 3 May 2019

2 வருடங்களுக்கு முன்னரே தொடர்பறுந்து விட்டது: CTJ விளக்கம்


சாய்ந்தமருது சுற்றி வளைப்பின் போது தீவிரவாதிகள் தற்கொலை செய்து கொண்டதில் உயிரிழந்ததாக கருதப்படும் புலஸ்தினி மகேந்திரனுடனான (சாரா) தொடர்புகள் இரண்டரை வருடங்களுக்கு முன்னரே அறுந்து விட்டதாக தெரிவிக்கிறது தற்போது சிலோன் தவ்ஹீத் ஜமாத் எனும் பெயரில் இயங்கும் அமைப்பு.


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் எனும் பெயரில் குறித்த அமைப்பினர் இயங்கிய காலத்தில் நீர்கொழும்பு தற்கொலைதாரி ஹஸ்தும் மற்றும் புலஸ்தினி ஆகியோர் தம்மோடு தொடர்பிலிருந்தமை மற்றும் அவர்களது திருமண வாழ்க்கைக்கு உதவி செய்தமை உண்மையெனினும், பின்னர் குறித்த பெண் தாம் இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதாகவும் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டதாகவும் தெரிவித்து பெற்றோருடனேயே சென்று விட்டதாக குறித்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்பாக மீண்டும் அப்பெண்ணைக் காணவில்லையென தாம் தொடர்புகொள்ளப்பட்டதாகவும் இவ்வமைப்பினர் தெரிவித்துள்ள அதேவேளை புலஸ்தினி நீண்டகாலமாக தொடர்புகொள்ளவில்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment