நீர்கொழும்பு தாக்குதல்தாரி - CTJ ராசிக்குக்கு நேரடி தொடர்பு: தாய் வாக்குமூலம் (video) - sonakar.com

Post Top Ad

Thursday, 2 May 2019

நீர்கொழும்பு தாக்குதல்தாரி - CTJ ராசிக்குக்கு நேரடி தொடர்பு: தாய் வாக்குமூலம் (video)நீர்கொழும்பு, கட்டுவாபிட்டிய சென் செபஸ்தியன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தியதாக பொலிசாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அச்சி முகம்மது ஹஸ்தும் எனும் நபரும் தேடப்படுவோர் பட்டியலில் வெளியிடப்பட்டிருந்த சாரா என அறியப்படும் புலஸ்தினி மகேந்திரனும் கணவன் மனைவியென குறித்த பெண்ணின் தாயார் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இவர்களது திருமணத்தை நடாத்தி வைத்ததோடு தனது  பிள்ளையை CTJ (முன்னாள் SLTJ) ராசிக்கிடமே ஒப்படைத்துச் சென்றதாகவும் கவிதா மகேந்திரன் என தன்னை அறிமுகப்படுத்தும் தாயார் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்தாரிகள் யாருக்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென முன்னர் ராசிக் தரப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி ஐபிசி தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டுள்ள காணொளியைக் கீழ்க்காணலாம்.

சாய்ந்தமருது சம்பவத்தில் புலஸ்தினி மகேந்திரன் (சாரா) உயிரழந்துள்ளதாகவே கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்தகவல் தொடர்பில் ராசிக் தரப்பிலிருந்து விளக்கம் கோருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதுடன், அவ்வாறு கிடைக்கப்பெறின் பிரசுரிக்கப்படும்.

No comments:

Post a comment