முஸ்லிம் சிவில் சமூக ஏற்பாட்டில் ஒற்றுமைக்கான கவனயீர்ப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 4 May 2019

முஸ்லிம் சிவில் சமூக ஏற்பாட்டில் ஒற்றுமைக்கான கவனயீர்ப்பு


மதங்களைத் தாண்டிய மனிதம் - ஒற்றுமைக்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வொன்று இன்று கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.

மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலி, இராணுவ கட்டளைத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க, ரிஸ்வி முப்தி, Dr. ராதிகா குமாரசுவாமி உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் மற்றும் சமயத் தலைவர்கள், சமூக ஆர்வலர்களும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.


35 முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஈஸ்டர் தாக்குதலை நினைவுகூறி 2 நிமி மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment