ஊவா மாகணத்தில் ஈரானிய பல்கலையின் சட்டவிரோத கிளை - sonakar.com

Post Top Ad

Saturday, 4 May 2019

ஊவா மாகணத்தில் ஈரானிய பல்கலையின் சட்டவிரோத கிளை


ஊவா மாகாணத்தில் பாடசாலையொன்றில், பெரும்பாலும் இந்து சமய மாணவர்களை உள்வாங்கி சட்டவிரோதமான முறையில் கொழும்பில் இயங்கும் அல்-முஸ்தபா பல்கலையின் கிளையொன்று அங்கு இயங்கி வருவதாக செந்தில் தொண்டமான் தெரிவிக்கிறார்.கொழும்பில் இயங்கி வரும் குறித்த பல்கலை ஈரானிய சமய வழிமுறைகளை (ஷியா) மாணவர்களுக்கு போதிப்பதாக ஏலவே முஸ்லிம் சமூகத்தில் சர்ச்சைகள் உள்ள நிலையில் ஊவாவில் இயங்கும் கிளையில் ஏனைய மதத்தைச் சேர்ந்தோருக்கே பெரும்பாலும் அல்-குர்ஆன், அரபு மொழி மற்றும் ஈரானிய அரசியல் உட்பட்ட விடயங்கள் கற்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதலையடுத்து நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் முஸ்லிம்கள் தொடர்பில் பாரிய அச்சம் உருவாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment