புறக்கோட்டை கடையொன்றிலிருந்தும் 'கத்திகள்' மீட்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 4 May 2019

புறக்கோட்டை கடையொன்றிலிருந்தும் 'கத்திகள்' மீட்பு


ஈஸ்டர் தாக்குதலையடுத்து நாட்டில் பல இடங்களில் வாள்கள், கத்திகள், கூரிய ஆயுதங்கள், சேர்கிட் போர்டுகள், சிடிக்கள் கைப்பற்றப்பட்டு வரும் தொடர்ச்சியில் புறக்கோட்டை வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்தும் 300 நீளமான கத்திகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றிலிருந்தே இவ்வாறு கத்திகள் மீட்கப்பட்டுள்ளதுடன் உரிமையாளரைக் காணவில்லையெனவும் சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

சுமார் 15 வருடங்களாக பௌத்த துறவிகளுக்கான காவி உடைகளை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நபர்களை நேற்றைய தினம் பலபிட்டியில் வைத்து பொலிசார் கைது செய்திருந்த அதேவேளை, 5 சாக்குகளில் முஸ்லிம் நபர்கள் காவியுடை வைத்திருந்ததாக பிரச்சாரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment