சட்ட-ஒழுங்கு அமைச்சு பொன்சேகாவுக்கு இல்லை: மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Saturday, 4 May 2019

சட்ட-ஒழுங்கு அமைச்சு பொன்சேகாவுக்கு இல்லை: மைத்ரி!


நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையை அரசியலுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அனைத்து தரப்பினரும் முயன்று வரும் நிலையில் சரத் பொன்சேகாவுக்கு சட்ட - ஒழுங்கு அமைச்சைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி இறங்கியிருந்தது.எனினும், எக்காரணம் கொண்டும் சரத் பொன்சேகாவை அப்பதவியில் நியமிக்க முடியாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு மற்றும் சட்ட - ஒழுங்குக்குப் பொறுப்பான ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் பற்றி அவருக்கும் முன் கூட்டியே தெரியும் என்ற சந்தேகம் வலுத்து வருகின்ற அதேவேளை தற்போது பேசப்படும் 'தீவிரவாதத்தை' அடக்கிய பெருமையைத் தனதாக்கிக் கொள்வதில் ஜனாதிபதி மும்முரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment