இலங்கை தாக்குதலுக்காக 4.5 மில்லியன் டொலர் பரிமாறப்பட்டதாக சந்தேகம் - sonakar.com

Post Top Ad

Saturday, 4 May 2019

இலங்கை தாக்குதலுக்காக 4.5 மில்லியன் டொலர் பரிமாறப்பட்டதாக சந்தேகம்


இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணம் பரிமாறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


ஐ.எஸ். அமைப்பிற்காக இணையமூடாக பணம் பெறக்கூடிய அமைப்பொன்றிற்கு ஏப்ரல் 20ம் திகதி இவ்வாறு திடீரென வந்து சேர்ந்த பெருந்தொகை பணம் தாக்குதலின் மறுநாளே சந்தேகத்துக்குரிய கணக்கிலிருந்து மீளப்பெற்றிருப்பதைப் பின்னணியாகக் கொண்டு இச்சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

வேர்ச்சுவல் கரன்சியென அறியப்படும் 'பிட்கொயின்' பெறுமதியிலேயே இவ்வாறு முன்னரும் ஹமாஸ் நிறுவனத்துக்கு நிதி சேகரித்ததாக சந்தேகிக்கப்படும் நிறுவனம் கணக்கொன்றினூடாக பணப்பரிமாற்றம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் தாக்குதலை நடாத்திய சஹ்ரான் அதற் சில நாட்களுக்கு முன்னர் தன் தங்கையிடம் 20 லட்ச ரூபா பணம் வழங்கியுள்ள அதேவேளை கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வெடிபொருட்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல்தாரிகள் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்தே தாக்கதலை நடாத்தியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment