தீவிரவாத தாக்குதல்: ஞானசாரவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை! - sonakar.com

Post Top Ad

Friday 3 May 2019

தீவிரவாத தாக்குதல்: ஞானசாரவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!



ஈஸ்டர் ஞாயிறு தினம் இடம்பெற்ற தாக்குதலையடுத்து 50 விகாரைகள் மீது தாக்குதல்கள் இடம்பெறப் போவதாக ஞானசார தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் இன்று அவரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்தியுள்ளனர்.



நீண்டகாலமாக தம்மால் சுட்டிக்காட்டப்பட்ட அடிப்படைவாதம் தலையெடுத்து விட்டதாக பௌத்த கடும்போக்குவாத சக்திகள் தெரிவித்து வரும் நிலையில், ரஞ்சன் ராமநாயக்க போன்றோரும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி குற்றங்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், விகாரைகள் தாக்குதலுக்குள்ளாகும் என ஞானசார தெரிவித்திருந்தமை தொடர்பில் விசாரணை நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Abdul said...

பர்மா பௌத்த தீவிரவாதிகளுக்கும் இலங்கையின் பௌத்த கடும்போக்கு மத இயக்கத்துக்கும் இடையில் நிறைய தொடர்புகள் அண்மைக்காலங்களாக இருந்து வருகின்றன அவை உடனடியாக தடுக்கவேண்டும் இல்லையெனில் மத கலவரமாக இலங்கை நாட்டில் இடம்பெறும்.

Post a Comment