பிரபாகரனின் படம்: யாழ் பல்கலை மாணவர்க்கு 16ம் திகதி வரை விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Friday, 3 May 2019

பிரபாகரனின் படம்: யாழ் பல்கலை மாணவர்க்கு 16ம் திகதி வரை விளக்கமறியல்


பிரபாகரனின் படம், ஒளிப்பேழைகள் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகத்தினை இன்று சுற்றி வளைத்து தேடலில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர், மாணவ ஒன்றிய அறையிலிருந்து இவ்வாறு பிரபாகரன் பற்றிய படங்கள் மற்றும் தமிழீழ வரைபடத்தையும் கைப்பற்றியதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திவாகரன் மற்றும் கபில்ராஜ் ஆகிய இருவருக்கு இவ்வாறு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.a

No comments:

Post a comment