அரிய வகை Yangtze ஆமை 90 வயதில் உயிரிழப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 15 April 2019

அரிய வகை Yangtze ஆமை 90 வயதில் உயிரிழப்பு



உலகிலேயே நான்கு Yangtze வகை ஆமைகளே காணப்படுகின்ற நிலையில் அதில் ஒரு பெண் ஆமை 90 வயதில் உயிரிழந்துள்ளது.



ஆண் - பெண் ஜோடியொன்று சீனாவிலும் இன்னொரு ஜோடி வியட்னாமிலும் இருப்பதாக நம்பப்பட்டு வருகின்ற நிலையில் சீனாவில் வாழ்ந்து வந்த பெண் ஆமை இன்று உயிரிழந்துள்ளது. 

அழிந்து வரும் உயிரினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள குறித்த வகை ஆமைகள் 100 கிலோ வரையான எடையும் ஆழமான கழுத்து பகுதியுடனும் சற்று வித்தியாசமான உருவ மற்றும் கவச அமைப்பைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment