தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயர்வு! - sonakar.com

Post Top Ad

Monday, 15 April 2019

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயர்வு!


தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை 10,000 ரூபாவிலிருந்து 12,500 ரூபாவாக உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் ரவீந்ர சமரவீர.இதனடிப்படையில் மே மாதம் முதலாம் திகதி முதல் தனியார் துறை ஊழியர்களின் குறைந்த பட்ச சம்பளம் 12,500 ரூபாவாக உயரும் எனவும் வரவு-செலவுத்திட்டம் ஊடாக வழங்கப்படும் 3500 ரூபா சலுகைக் கொடுப்பனவுடன் குறைந்த பட்ச சம்பளம் 16,000 ரூபாவாக (மாதாந்தம்) உயரும் எனவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இதற்கான சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படும் எனவும் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment