சேர்ந்து தட்டினால் ஓசை 'வலுவாக' இருக்கும்: சங்கக்கார (video) - sonakar.com

Post Top Ad

Saturday, 20 April 2019

சேர்ந்து தட்டினால் ஓசை 'வலுவாக' இருக்கும்: சங்கக்கார (video)ஒவ்வொரு இனக்குழுமமும் தமக்கு மட்டும் உரியதாக சில விடயங்களை வரையறுத்துக் கொள்ளும் நிலைப்பாடு மாறி நாட்டின் குடிமக்கள் எனும் அடிப்படையில் 'நமது' என சிந்திக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறார் குமார் சங்கக்கார.அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையென அவர் தெரிவித்து வருகின்ற போதிலும், குமார் சங்கக்காரவை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவதில் பலர் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் சங்கக்காரவின் பெயரில் 30 வீடுகளைக் கொண்ட மாதிரிக் கிராமம் ஒன்றிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போதே சங்கக்கார மேற்கண்டவாறு தெரிவித்திருந்ததுடன்  தனித்தனியாகக் கை தட்டினால் வரும் சத்தத்தை விட அனைவரும் ஒன்றிணைந்து தட்டினால் ஓசை வலுவாக இருக்கும் எனவும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment