
குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் லத்தீப் மற்றும் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சு.க சார்பில் போட்டியிட்ட பலர் இன்று ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
ஐ.தே.க செயலாளர் அகில விராஜ் காரிய வசத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி, கட்சி உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் தாம் ஐ.தே.க வெற்றிக்காக பாடுபடப்போவதாக குறித்த நபர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச குருநாகலில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment