மைத்ரியின் நீதிமன்ற முயற்சிக்கு நாங்கள் தடையில்லை: UNP - sonakar.com

Post Top Ad

Friday, 12 April 2019

மைத்ரியின் நீதிமன்ற முயற்சிக்கு நாங்கள் தடையில்லை: UNPதனது பதவிக்காலம் பற்றி உச்ச நீதிமன்றிடம் அபிப்பிராயம் அறிய முற்படும் மைத்ரிபால சிறிசேனவின் முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சியிடம் எவ்வித ஆட்சேபனையும் இல்லையென தெரிவிக்கிறார் கட்சி முக்கியஸ்தரும் அமைச்சருமான அஜித் பெரேரா.பொதுஜன பெரமுனவினர் ஏலவே இச்செயலை விமர்சித்துள்ள நிலையில் ஐ.தே.கட்சி இதில் ஆட்சேபனையெதுவுமில்லையெனவும் ஆனாலும் ஜனாதிபதி அதனை தாமதமின்றி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக ஜனாதிபதியின் பதவிக்காலம் எப்போது முடிவுறுகிறது என உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை அறியப் போவதாக ஸ்ரீலசுக செயலாளர் தயாசிறி இவ்வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment