'நல்ல நேரம்' பார்த்து மங்களவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: பந்துல - sonakar.com

Post Top Ad

Friday, 12 April 2019

'நல்ல நேரம்' பார்த்து மங்களவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: பந்துல


நிதியமைச்சர் மங்கள சமரவீர, வரவு-செலவுத் திட்டத்தின் தவறான புள்ளிவிபரங்களை இணைத்து நாடாளுமன்றை தவறாக வழிநடாத்தியுள்ளதாகவும் அதனால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டுவரப் போவதாகவும் தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.


சிங்கள புத்தாண்டையடுத்டுத்து வரும் 'நல்ல நேரத்தில்' நம்பிக்கையில்லா பிரேரணையை எழுத ஆரம்பிக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மங்கள முன் வைத்த புள்ளிவிபரங்கள் தவறானவையென்பதற்கு பல ஆதாரங்கள் இருப்பதாகவும், தேவையான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment