இலங்கை நிலவரம்: UK வாழ் இலங்கை முஸ்லிம்கள் அமைதிப் பேரணி! - sonakar.com

Post Top Ad

Saturday, 27 April 2019

இலங்கை நிலவரம்: UK வாழ் இலங்கை முஸ்லிம்கள் அமைதிப் பேரணி!


இலங்கையில் கடந்த ஞாயிறு இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்குத் தமது இரங்கல் மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும் இன்று இலங்கை முஸ்லிம்களுக்கான புலம்பெயர்ந்தோர் அமைப்பு (SLMDI - UK), கொஸ்மோஸ், சேர்ச்சஸ் டு கெதர் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து நடாத்திய அமைதிப் பேரணியொன்று மத்திய லண்டனில் இடம்பெற்றது.வெஸ்ட்மின்ஸ்டரில் இடம்பெற்ற கவனயீர்ப்பைத் தொடர்ந்து சுமார் 50 நிமிட நடைபவனியாகச் சென்ற சமூக ஆர்வலர்கள் மேற்கு லண்டன் மெடிஸ்த தேவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒற்றுமையை வலியுறுத்தும் விசேட நிகழவிலும் கலந்து கொண்டனர்.


அதனையடுத்து இலங்கைத் தூதரகத்துக்கு நடைபவனியாகச் சென்று அங்கு நாட்டில் நீதியை நிலைநாட்டக் கோரும் மகஜர் ஒன்றையும் கையளித்த இலங்கை முஸ்லிம்களுக்கான புலம்பெயர்ந்தோர் அமைப்பு தூதரகத்தின் முன் ஒன்று கூடி தமது எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதன் போது ஐக்கிய இராச்சியத்துக்கான பிரதி உயர்ஸ்தானிகர் வந்திருந்தோரை அணுகி ஏற்புரை நிகழ்த்தியிருந்தார்.


நிகழ்வுகளில் லெஸ்டர், க்றோலி, ரெடிங், லண்டன், மில்டன் கீன்ஸ் உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து வந்து ஆர்வலர்கள் கலந்து கொண்டிந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment