இலங்கைக்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 27 April 2019

இலங்கைக்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு அறிவிப்பு


இலங்கையில் நிலவி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு இந்திய பிரஜைகள் கட்டாயத் தேவைகள் எதுவுமின்றி இலங்கை செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.ஏலவே ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா இவ்வாறான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் பற்றிய ஆறு மாதங்களுக்கு முன்பே விபரங்கள் அறிந்ததாக தெரிவிக்கும் இந்தியா தற்போது இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வார இறுதியில் மேலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சாய்ந்தமருதில் தேசிய தவ்ஹீத் ஜமாத் பிரதானி சஹ்ரானின் குடும்பத்தினர் தங்கியிருந்த வீடு முற்றுகையிடப்பட்டு சஹ்ரானின் சகோதரர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment