UK: ஹரோ பள்ளிவாசலுக்கான புதிய நம்பிக்கையாளர் சபை தெரிவு - sonakar.com

Post Top Ad

Saturday, 6 April 2019

UK: ஹரோ பள்ளிவாசலுக்கான புதிய நம்பிக்கையாளர் சபை தெரிவு



லண்டன், ஹரோ பகுதியில் இலங்கை முஸ்லிம் கலாச்சார மையத்துடன் ஒன்றிணைவாக இயங்கி வரும் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலின் அடுத்த மூன்று வருடங்களுக்கான புதிய நம்பிக்கையாளர் சபை இன்று அதிகாலை தெரிவு செய்யப்பட்டனர்.

கடந்த 2000 ம் ஆண்டு முதல் கலாச்சார மையத்தை வழி நடாத்தி, கட்டியெழுப்புவுதில் பங்களித்த முன்னாள் தலைவர் முபாரக் ஜுனைதீன் தலைமையிலான முன்னாள் நிர்வாகிகள் புதிய மாற்றத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்த நிலையில் பத்துப் பேர் கொண்ட நம்பிக்கையாளர் சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.



புதிய நிர்வாகத்தில் இணைந்து கொள்வோர் விபரம்:

1. முனவ்வர் ஹாபிஸ்
2. முக்சித் சவாஹிர்
3. சேகு ரஸீன்
4. பாஹிம் காசிம்
5. அமானுல்லா கமால்தீன்
6. பைரூஸ் சனூன் லெப்பை
7. சப்ரி சுபைர்
8. பஸ்லின் ஹமீத்
9. ஹலால்தீன் அப்துல் ஜப்பார்
10. அஷ்ரப் முஹம்மத்

இலங்கை முஸ்லிம் கலாச்சார மையம் 1.8 மில்லியன் பவுன்ட்ஸ் செலவில் புதிய கட்டிடம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளமையும் இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment