ஜனாதிபதியின் பதவிக் காலம்: உச்ச நீதிமன்றை நாடப் போகும் SLFP - sonakar.com

Post Top Ad

Wednesday, 10 April 2019

ஜனாதிபதியின் பதவிக் காலம்: உச்ச நீதிமன்றை நாடப் போகும் SLFPஜனாதிபதியின் பதவிக்காலம் சட்டரீதியாக எப்போது முடிவுறுகிறது என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் அதனை தெளிவு படுத்தக் கோரியும் உச்ச நீதிமன்றை நாடப் போவதாக தெரிவிக்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர.ஜனாதிபதி பதவியேற்று ஐந்து மாதங்களின் பின்னரே 19ம் திருத்தச் சட்டம் சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இது எவ்வாறு பாதிக்கும் என்பது தொடர்பில் உச்ச நீதிமன்றின் அபிப்பிராயம் அறிய வேண்டியுள்ளதாக தயாசிறி மேலும் விளக்கமளித்துள்ளார்.

ஏலவே 19ம் திருத்தச் சட்டத்தைத் தவறாக விளங்கிக் கொண்டிருந்த ஜனாதிபதி கடந்த ஒக்டோபரில் பிரதமரை மாற்றி அரசியல் பிரளயத்தை உருவாக்கியிருந்தமையும் பின்னர் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a comment