சிறைச்சாலைக்குள் 'சயனைட்' : மாரல சுரங்க கைது! - sonakar.com

Post Top Ad

Wednesday, 10 April 2019

சிறைச்சாலைக்குள் 'சயனைட்' : மாரல சுரங்க கைது!


தனது எதிராளியொருவரைக் கொலை செய்வதற்காக வெலிகடை சிறைச்சாலைக்குள் சயனைட் குப்பிகள் இரண்டை தருவித்த மாரல சுரங்க என அறியப்படும் சமந்த புஷ்பகுமார எனும் பாதாள உலக பேர்வழியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.ஹெரோயின் வர்த்தகத்தின் பின்னணியில் கைதான சுரங்க, சிறைச்சாலைக்குள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அண்மையில் தனது எதிராளியொருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு சயனைட் குப்பிகள் இரண்டு மற்றும் சிரிஞ்சுகளையும் வெளியிலிருந்து தருவித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து புலனாய்வுத்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலினையடுத்து சுரங்க சுற்றி வளைக்கப்பட்டு தேடல் இடம்பெற்று, சயனைட் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

No comments:

Post a Comment