தென் மாகாண சபையும் கலைக்கப்பட்டது! - sonakar.com

Post Top Ad

Wednesday, 10 April 2019

தென் மாகாண சபையும் கலைக்கப்பட்டது!


நேற்றோடு பதவிக்காலம் முடிந்த நிலையில் தென் மாகாண சபையை கலைப்பதற்கான சுற்றுநிருபத்தில் கையொப்பமிட்டுள்ளார் தென் மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னக்கோன்.


இப்பின்னணியில் இன்று நள்ளிரவோடு தென் மாகாண சபை முழுதாக கலைக்கப்படுகிறது.

கிழக்கு, வட மத்திய மாகாண சபைகளின் பதவிக்காலங்கள் 2017ம் ஆண்டே நிறைவுற்றிருந்த அதேவேளை மேல் மாகாண சபையின் பதவிக்காலமும் இன்றோடு நிறைவுக்கு வரவுள்ளது. ஊவா மாகாண சபை செப்டம்பர் வரை இயங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடாத்துவதற்கான திட்டம் குறித்து இதுவரை அரசு நம்பிக்கை வெளியிட்டு வந்த போதிலும் பெரும்பாலும் அதற்கு முன்பதாக ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் சாத்தியக்கூறு இருப்பதாக அரசியல் பிரமுகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment