மார்க்கப் பிரச்சாரம் செய்ய 'தகுதி' சான்றிதழ்: Prof. ரொஹான் ஆலோசனை! - sonakar.com

Post Top Ad

Sunday, 28 April 2019

மார்க்கப் பிரச்சாரம் செய்ய 'தகுதி' சான்றிதழ்: Prof. ரொஹான் ஆலோசனை!இலங்கை முஸ்லிம்களில் மிகக்குறைந்த அளவினரே கடும்போக்கு நிலைப்பாட்டை ஆதரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள பேராசிரியர் ரொஹான் குணரத்ன,  இருக்கும் கடும்போக்குவாதிகளை கவர்வதற்கான விரிவான திட்டமிடல்களை ஐ.எஸ். இலங்கையில் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கிறார்.


பாதுகாப்பு விவகார நிபுணரான பேராசிரியர், ஐ.எஸ். அமைப்பினரை சிரியா சென்று சந்தித்து தமது அனுபவங்களையும் அளவீடுகளையும் புத்தகமாக வெளியிட்டு சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றவராவார். அவருடைய கருத்தினடிப்படையில் ஜமாத்தே மில்லத் இப்ராஹிம் எனும் அமைப்பு இலங்கையில் ஐ.எஸ்.ஸின் நேரடி கிளை அமைப்பாக இயங்குவதற்காகவே உருவாக்கப்பட்டதாகவும் இலங்கையில் மத சார்பு கடும்போக்குவாதம் கொண்டோரைக் கவர்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இது தொடர்பில் கவனம் செலுத்தி, இலங்கையில் மார்க்கப் பிரச்சாரகர் என்றும் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டவர்களே பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வகையில் விதிமுறை அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் ஆலோசனை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

mannar Muslim said...

Excellent suggestion.
This will prevent green horns preaching Islam thus disgracing it

Post a comment