முன்னாள் பாதுகாப்பு முக்கியஸ்தர்களுடன் மஹிந்த சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 29 April 2019

முன்னாள் பாதுகாப்பு முக்கியஸ்தர்களுடன் மஹிந்த சந்திப்பு


ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து நேற்றோடு பெரும்பாலும் தீவிரவாத குழுவின் முக்கியஸ்தர்கள் அனைவரும் இறந்து அல்லது கைது செய்யப்பட்டு உள்ளனர்.


இந்நிலையில், தமது அரசின் போது பாதுகாப்பு முக்கியஸ்தர்களாகப் பணியாற்றிய ஓய்வுபெற்ற அதிகாரிகளை கோட்டாபே ராஜபக்ச தலைமையில் சந்தித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.

இதன் போது நாட்டில் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் பற்றிக் கலந்துரையாடியதாக மஹிந்த தெரிவிக்கின்ற அதேவேளை அவசரகால சட்டத்தை அமுல் படுத்தி நூற்றுக்கணக்கான கைதுகள் மற்றும் தொடர் சோதனை நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் முன்னெடுத்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment