Port City: கட்டார் முதலீட்டாளர்களுக்கு ரோசி அழைப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday 2 April 2019

Port City: கட்டார் முதலீட்டாளர்களுக்கு ரோசி அழைப்பு


இலங்கை வரைபடத்தை மாற்றியமைககும் அளவுக்கு கொழும்பு நகரில்  பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக கடலை நிரப்பி போர்ட் சிட்டி அமைக்கப்படுகின்றது. கட்டார் நாட்டிலுள்ளவர்கள் வருகை தந்து முதலீடுகள் செய்யலாம். வர்த்தகக் கம்பனிகள் ஆரம்பிக்கலாம். ஆசியாவில்  மிகப் பெரிய மாநகர சபை கொழும்பு ஆகும்.  150 வருடங்கள் பழைமை வாய்ந்த மாநகர சபையும் இதுவே. இதில் 14 பிரிவுகள் உள்ளன. பொறியியல், சுகாதாரம் எனப் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதன் மூலம் எல்லா வேலைத் திட்டங்டகளும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன ஆறு இலட்சத்துக்கு; மேற்பட்ட மக்கள் நகர எல்லைக்குள் வாழுகின்றனர் என்று  கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக தெரிவித்தார்.


கட்டார் நாட்டிலுள்ள  உள்ளுராட்சி மன்றங்களுக்கான அரசியல் பிரதிநிதிகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற சபைகளுக்கான  தலைவர் இளவரசருமான முஹம்மத் பின் ஹமூத் ஷாபி அல் ஷாபி அவர்களுடைய தலைமையில்  மூன்று நாள்  உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற் கொண்டு  இலங்கைக்கு விஜயம் செய்த தூது குழுவினர்கள் கொழும்பு மாநகர சபையை பார்வையிடுவதற்காக    இலங்கை உள்ளுராட்சி ஆளுகை நிறுவனத்தின்  பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர்  சஹீட் எம். ரிஸ்மி தலைமையில் சென்ற தூதுக் குழவினருக்கு கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக சிறந்த வரவேற்பு உபசாரத்தை வழங்கியதுடன் அவர்களிடம் முக்கியமான வேண்டுகோளையும் முன் வைத்தார்.

அதேவேளையில் இலங்கையிலுள்ள பெரு எண்ணிக்கையிலான  இளைஞர்கள் கட்டார் நாட்டில் வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கிடையிலான பரஸ்பர உறவில் உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக அதிகம் கவனம் செலுத்தி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கத் தயாராக இருக்கின்றோம் என்று கட்டார் நாட்டின் தூதுக் குழுவினர் கருத்துரை பகிர்ந்தனர்.

இந்த சந்திப்பின் போது தூதுக் குழுவினர் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவித்தார்கள். அத்துடன் முதல்வர்  வருகை தந்த தூதுக் குழுவினர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கி கௌரவித்தார்.

இதில் கட்டார் உய ஸ்தானிகராயத்தின் அதிகாரிகளான கலாநிதி எம். இனாமுல்லாஹ்,  பிரதம கணக்காளர் அனஸ் அப்துல் மஜீத், இலங்கை உள்ளுராட்சி ஆளுகை நிறுவனத்தின்  அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-இக்பால் அலி


No comments:

Post a Comment