ஜுன் வரை வேட்பாளர் அறிவிப்பில்லை: பெரமுன - sonakar.com

Post Top Ad

Tuesday, 2 April 2019

ஜுன் வரை வேட்பாளர் அறிவிப்பில்லை: பெரமுன


மஹிநத ராஜபக்சவின் பெரமுன சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் அறிவிப்பு ஜுன் மாதம் வரை இடம்பெறாது என தெரிவிக்கிறது அக்கட்சி.கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் வைத்தே இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படும் வரை பெரமுன அவசரப்படப் போவதில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபே ராஜபக்சவே பெரமுனவின் வேட்பாளர் பட்டியலில் முன்னிலை வகிக்கும் அதேவேளை அறிவிப்பு வெளியானதுமே தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட உள்ளதாக கோத்தா தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment