NTJ போன்ற அமைப்புகளை தடை செய்ய சட்டம் உருவாகிறது: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Friday, 26 April 2019

NTJ போன்ற அமைப்புகளை தடை செய்ய சட்டம் உருவாகிறது: மைத்ரி



வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது  செய்வதற்கு ஏதுவான சட்டமோ அவ்வாறான அமைப்புகளை தடை செய்வதற்கான சட்டமோ தற்சமயம் இல்லையென்பதை தெளிவுபடுத்தியுள்ள ஜனாதிபதி, தற்சமயம் சட்டவல்லுனர்கள் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இப்பின்னணியில் இலங்கையில் தீவிரவாதப் போக்கை கடைப்பிடிக்கும் அமைப்புகள் தடை செய்யப்படுவதற்கான நடவடிக்கையெடுக்கப்படும் என இது தொடர்பிலான கேள்விக்கு பதிலளித்துள்ளார் மைத்ரி.

தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஏனைய தவ்ஹீத் ஜமாத் அமைப்புகள் இலங்கையில் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தொடர்ச்சியாக தகவல் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment