ஒரு வாரத்திற்கு முன் MSD ஊடாக 'எச்சரிக்கை' : சொல்கிறார் மனோ! - sonakar.com

Post Top Ad

Monday, 22 April 2019

ஒரு வாரத்திற்கு முன் MSD ஊடாக 'எச்சரிக்கை' : சொல்கிறார் மனோ!


ஒரு வார காலத்திற்கு முன்பாகவே தனது அமைச்சு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு (MSD) அவர்களது நிர்வாக பிரிவினரால் கொழும்பில் தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெறப் போவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கிறார் அமைச்சர் மனோ கணேசன்.தனது தந்தைக்கும் முதல் நாளே தாக்குதல்கள் பற்றித் தெரியும் என நேற்றைய தினம் தகவல் வெளியிட்டு ஹரின் பெர்னான்டோ சர்ச்சையைக் கிளப்பியதையடுத்து மனோ கணேசனும் பட்டியலில் இணைந்துள்ளார்.

கொழும்பில் அரசியல்வாதிகள் மீது தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்படவுள்ளதாக இவ்வெச்சரிக்கை அமைந்திருந்ததாக மனோ மேலும் தெரிவித்துள்ள அதேவேளை தேவாலயத்தில் இடம்பெறப் போவதாக ஹரினின் தந்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment