10 நிமிடங்களுக்கு முன்பும் எச்சரிக்கை கிடைத்துள்ளது: ராஜித - sonakar.com

Post Top Ad

Monday, 22 April 2019

10 நிமிடங்களுக்கு முன்பும் எச்சரிக்கை கிடைத்துள்ளது: ராஜித


நேற்றைய தினம் தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் உள்ள இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறப் போவது குறித்து தொடர்ச்சியாக வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட தகவல்கள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.சம்பவங்கள் இடம்பெறுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பும் இவ்வெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் அனைத்தும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் ராஜித மேலும் விளக்கமளித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்ட-ஒழுங்குக்குப் பொறுப்பான ஜனாதிபதி இவ்வேளையில் வெளிநாடு சென்றிருந்ததோடு தற்போது நாடு திரும்பி பாதுகாப்பு கவுன்சிலோடு பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment