ஆறு இடங்களிலும் 'தற்கொலைத்' தாக்குதல்களே: அரசு! - sonakar.com

Post Top Ad

Monday, 22 April 2019

ஆறு இடங்களிலும் 'தற்கொலைத்' தாக்குதல்களே: அரசு!நேற்றைய தினம் கொழும்பு - நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்கள் உட்பட தலைநகரில் இயங்கி வரும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் மீதும் நடாத்தப்பட்ட ஆறு தாக்குதல்களும் தற்கொலைத் தாக்குதல்களே என அரச பகுப்பாய்பு அதிகாரி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.ஹோட்டல் தாக்குதல்களில் இன-மத பேதமின்றி உள்நாட்டவர்களும், வெளிநாட்டவர்களும் உயிரிழந்துள்ளதுடன் தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் விசேட வழிபாட்டுக்காகச் சென்றிருந்த அப்பாவி மக்களும் நேற்றைய பயங்கரவாத தாக்குதல்களினால் பலிகொள்ளப்பட்டுள்ளனர்.

இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் உயிரிழந்தோர் தொகை 290 என பொலிசார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment