சா'மருதில் இறந்தவர்களுக்கு உரிமை கோரும் ISIS - sonakar.com

Post Top Ad

Sunday, 28 April 2019

சா'மருதில் இறந்தவர்களுக்கு உரிமை கோரும் ISISசாய்ந்தமருதில் நேற்று முன் தினம் மாலை இடம்பெற்ற சுற்றிவளைப்பின் பின்னான தாக்குதலில் உயிரிழந்த மூவர் தமது தற்கொலைதாரிகள் என உரிமை கோரியுள்ளது ஐ.எஸ்.வழமையான தமது இணையத்தளம் ஊடாக இத்தகவலை இதனை அறிவித்துள்ள குறித்த அமைப்பு, இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் தோட்டாக்கள் தீர்ந்த பின் தமது போராளிகள் தற்கொலை அங்கியை இயக்கியதாகவும் 17 இறை மறுப்பாளர்களை கொன்றுவிட்டே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எனினும், பாதுகாப்பு தரப்பில் எவ்வித இழப்புகளும் இல்லையென இச்செய்தி நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் சஹ்ரானின் சகோதரர்கள் இருவர், தந்தை, குடும்ப பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment