இன ரீதியான வெறுப்பூட்டும் செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: இராணுவம் - sonakar.com

Post Top Ad

Sunday, 28 April 2019

இன ரீதியான வெறுப்பூட்டும் செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: இராணுவம்


அவசரகால சட்டம் அமுலில் உள்ள நிலையில் இனங்களுக்கிடையில் பதற்றத்தைத் தோற்றுவிக்கும் வகையில் மற்றும் இன வெறுப்பூட்டும் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது இராணுவம்.


நேற்றைய தினம் பிரபல சிங்கள வானொலி ஒன்றின் செய்தித்தளம் மொபிடெல் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் இணைய இணைப்பூடாக பார்வையிட முடியாதபடி தடை செய்யப்பட்டிருந்தது. எனினும், பின்னர் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு படையினருக்கு தவறான தகவல்கள வழங்குதல், வழிநடாத்தல் உட்பட இன ரீதியிலான பதற்றத்தைத் தோற்றுவிக்க முனைதலுக்கு எதிராக இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment