தேடப்பட்டு வந்த 'அப்துல் ஹக்' சகோதரர்கள் நாவலபிட்டியில் கைது! - sonakar.com

Post Top Ad

Sunday, 28 April 2019

தேடப்பட்டு வந்த 'அப்துல் ஹக்' சகோதரர்கள் நாவலபிட்டியில் கைது!கடந்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் தேடப்பட்டு வந்த அப்துல் ஹக் சகோதரர்கள் நாவலபிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.சாதிக் அப்துல் ஹக் இப்ராஹிம், சாஹித் அப்துல் ஹக் இப்ராஹிம் என அறியப்படும் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களே மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் தேடல் மற்றும் கைது நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற அதேவேளை முஸ்லிம் சமூகத்தின் ஒத்துழைப்புடனேயே முக்கிய கைதுகள் இடம்பெற்று வருவதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment