தெற்காசியாவில் தலை தூக்கும் ISIS: பங்களதேஷ் உஷார்! - sonakar.com

Post Top Ad

Saturday, 27 April 2019

தெற்காசியாவில் தலை தூக்கும் ISIS: பங்களதேஷ் உஷார்!

https://www.photojoiner.net/image/heyBLHdS

இலங்கையை அடுத்து பங்களதேஷில் ஐ.எஸ் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளதுடன் இதன் பின்னணியில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது.


வியாழன் இரவு முதல், ஐ.எஸ் அமைப்பின் கொடியுடன் 'இன்ஷா அல்லாஹ், விரைவில் வரும்' என்ற வாசகம் பொதிந்த விளம்பர பிரச்சாரம் ஒன்று அங்கு சமூகம வலைத்தளங்கள் ஊடாக வேகமாக பரவியுள்ளதன் பின்னணியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

தெற்காசிய முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் பல்வேறு கொள்கை இயக்கங்கள் வேரூன்றியுள்ள அதேவேளை, நான்கு தசாப்தங்களுக்கு முன் கிலாபத் ஆட்சியை நிறுவும் சித்தார்ந்தத்தை வலியுறுத்திய அமைப்புகளிலிருந்து புதிய கடும்போக்கு, தீவிரவாத மற்றும் ஐ.எஸ். ஆதரவு அமைப்புகள் தோன்றி வளர்ந்துள்ளன. அத்துடன் சமத்துவ - சகோதரத்துவ போக்கினை எதிர்த்து மேலான்மைவாதம் போதிக்கும் சித்தார்ந்தங்களும் தவ்ஹீத் எனும் போர்வையில் வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் இலங்கை அதன் விளைவை தற்போது அனுபவித்து வருகிறது.

இதேவேளை, பெரும்பாலான சித்தார்ந்தங்கள் இந்தியா - பங்களதேஷ் - பாகிஸ்தான் போன்ற நாடுகளிலேயே உருப்பெற்று மத்திய கிழக்கோடு தொடர்புபடுகின்றமையும் பங்களதேஷில் ஏலவே ஒரு அமைப்பு ஐ.எஸ்ஸுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமையும் அதே அமைப்பு இலங்கையிலும் அண்மைக்காலமாக ஊடுருவி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a comment