ஸ்லேவ் ஐலன்ட் 'வாள்கள்': மாவனல்லை சூத்திரதாரியும் தொடர்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 27 April 2019

ஸ்லேவ் ஐலன்ட் 'வாள்கள்': மாவனல்லை சூத்திரதாரியும் தொடர்பு


நேற்றைய தினம் கொழும்பு - 02, ஸ்லேவ் ஐலன்ட் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட வாள்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் தாஜுதீன் ஏலவே கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், குறித்த வாள்கள் அனைத்தும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும் அதற்கான நிதியை மாவனல்லை புத்தர் சிலை உடைப்பில் தேடப்படும் பிரதான சூத்திரதாரியே வழங்கியிருப்பதாகவும் தற்போது தெரிவிக்கப்படுகிறது.

இப்ராஹிம் மௌலவியின் புதல்வர்கள் இருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வரும் நிலையில், குறித்த சம்பவத்தின் பின்னணியிலேயே வனாத்தவில்லுவில் ஐ.எஸ். பயிற்சி முகாம் அமைந்திருந்தமை கண்டறியப்பட்டதோடு தற்சமயம் சஹ்ரான் குழுவின் செயற்பாடுகளும் இடம்பெற்று நாடு முழுவதும் தேடல் நடவடிக்கைகள் இடம்பெறுகிறது.

இந்நிலையில், தாஜுதீன் பள்ளிவாசலில் வாள்களை பதுக்கி வைத்தமையின் பின்னணி பற்றி தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment