தற்காலிக 'புர்கா' தடை: அமைச்சர்களுக்கிடையில் கருத்துப் பிளவு - sonakar.com

Post Top Ad

Saturday 27 April 2019

தற்காலிக 'புர்கா' தடை: அமைச்சர்களுக்கிடையில் கருத்துப் பிளவு


கடந்த ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களையடுத்து நாட்டில் அவசரகால சட்டம் அமுலுக்கு வந்துள்ளதுடன் நாடளாவிய ரீதியிலான சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், சோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் பொருட்டு புர்கா அணிந்து வெளியில் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.



இதேவேளை, தற்காலிகமாக புர்காவைத் தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை நீதியமைச்சர் தலதா அத்துகோறள சமர்ப்பித்திருந்த நிலையில் அமைச்சரவையில் இது தொடர்பில் கருத்து பிளவு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. சம்பிக்க ரணவக்க , மத்தும பண்டார உட்பட்ட சில அமைச்சர்கள் இதனை ஆதரித்துள்ள போதிலும் மங்கள சமரவீர உட்பட மேலும் சில அமைச்சர்கள் உடன்பட மறுத்துள்ள நிலையில் இது தொடர்பில் மேலும் ஆராயப்படுகிறது.

இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மத்தியகிழக்கிலிருந்து பாரிய நிதியுதவிகள் பெறப்படுகின்ற அதேவேளை கடந்த ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களும் இணைந்து எதிர்த்து வருவதுடன் நேற்றைய தினமும் சம்மாந்துறையில் சந்தேகத்துக்கிடமானவர்களைப் பற்றி பொலிசாருக்குத் தகவல் வழங்கியிருந்தமையும்  அதன் பின்னணியில் பெருந்தொகை வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு மற்றும் எதிர்கால தாக்குதல்தாரிகளையும் பாதுகாப்பு தரப்பினரால் முறியடிக்க முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment