ISIS சந்தேக நபர்களை கைது செய்ய முடியாமல் போனது ஏன்? ரணில் விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Friday 26 April 2019

ISIS சந்தேக நபர்களை கைது செய்ய முடியாமல் போனது ஏன்? ரணில் விளக்கம்!



ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய, வெளிநாடு சென்று பயிற்சி பெற்று நாடு திரும்பிய நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 30க்கு மேற்பட்ட நபர்கள் இருப்பதாக முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தகவல் வெளியிட்டிருந்தார்.



எனினும், சிறுபான்மை பலத்துடன் இயங்கிய அரசு அதனை உடனடியாக நிராகரித்து விடயம் பெரிதாவதைத் தவிர்த்திருந்தது. இந்நிலையில், குறித்த சந்தேகநபர்கள் பற்றி அரசாங்கம் தெளிவாக அறிந்திருந்தும் அவர்களைக் கைது செய்யாதிருந்தமைக்கான காரணத்தை விளக்கியுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

அவரது கூற்றுப்படி, இலங்கையில் அரசுக்கோ - பாதுகாப்புக்கோ அச்சுறுத்தல் ஏற்படுத்தாத ஒருவரை வெளிநாட்டில் தீவிரவாத இயக்கம் ஒன்றில் பயிற்சி பெற்ற ஒரே காரணத்திற்காக கைது செய்ய நாட்டின் சட்டத்தில் இடமில்லையென அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவசரகால சட்டம் அமுலில் உள்ள நிலையில் பல கைதுகள் இடம்பெறுவதுடன் நேற்றைய தினம் தர்கா நகரில் ஐ.எஸ் செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment