
மட்டக்களப்பு சயோன் தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய ரில்வான் என அறியப்படும் நாசர் அசாரின் துண்டிக்கப்பட்ட தலையை குறித்த நபரின் தாயார் அடையாளம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், குறித்த நபரின் நடவடிக்கைகள் பற்றிய மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
முதலில், குறித்த தாக்குதலை நடாத்தியவர் ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்தவர் என தகவல் பரவியிருந்த நிலையில், இதன் பின்னணியில் கிழக்கு மாகாண மக்களிடையே பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment