தெமட்டகொட இன்சாப் 'தொழிலதிபராக' உதவிய அரசியல்வாதி! - sonakar.com

Post Top Ad

Friday, 26 April 2019

தெமட்டகொட இன்சாப் 'தொழிலதிபராக' உதவிய அரசியல்வாதி!


ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய தெமட்டகொடயில் வசித்து வந்த இன்சாபுக்கு, வெள்ளம்பிட்டியில் தொழிற்சாலை நடாத்திச் செல்வதற்கும் அங்கு செப்பு மூலப்பொருட்களை இராணுவத்திடமிருந்தே பெறுவதற்கும் அரசாங்கத்தில் ஆளுமையுள்ள அரசியல்வாதியொருவர் உதவி செய்துள்ளமை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.


கைத்தொழில் அபிவிருத்தி சபையில் தன்னை ஒரு சிறு கைத்தொழில் அதிபராக பதிவு செய்து (பதிவிலக்கம்: 1611216) கொண்டுள்ள இன்சாப் எனும் குறித்த நபர், இராணுவத்தினரிடமிருந்து 'உபயோகப்படுத்தப்பட்ட' வெற்று தோட்டா செல்களை தொடர்ச்சியாக பெற்று வந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

116/6, அவிஸ்ஸாவெல வீதி, வெல்லம்பிட்டி எனும் முகவரியில் இயக்கப்பட்ட குறித்த நபரது தொழிற்சாலையிலேயே வெடிகுண்டுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, குறித்த தொழிற்சாலையில் பணியாற்றிய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் சிறு கைத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சாதாரண கோட்டாவை விட அதிகமான அளவை இன்சாப் அஹமட் இப்ராஹிம் என அறியப்படும் குறித்த நபர் அரசியல் ஆளுமையூடாக பெற்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment