ராஜபக்ச திரும்பி வந்தாலேயே ISISஐ அழிக்க முடியும்: சு.சுவாமி! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

ராஜபக்ச திரும்பி வந்தாலேயே ISISஐ அழிக்க முடியும்: சு.சுவாமி!


2009ல் யுத்தத்தை நிறைவு செய்த மஹிந்த ராஜபக்ச மீளவும் அதிகாரத்துக்கு வந்தாலேயே இலங்கையில் ISIS பிரசன்னத்தை முற்றாக அழிக்க முடியும் என தெரிவிக்கிறார் சர்ச்சைப் பேர்வழி சுப்பிரமணிய சுவாமி.


இந்திய தூதரகம், ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்கள் இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக தொடர்ச்சியாக தெரிவித்து வரும் இந்திய ஊடகங்கள் இன்றைய தாக்குதல்களை நடாத்தியது கிழக்கிலங்கையைத் தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முஸ்லிம் அமைப்பொன்று என தெரிவிக்கிறது.

இந்நிலையில், இலங்கையில் ஐ.எஸ். அமைப்பு வேரூன்றி விட்டதாகவும் அதனை முற்றாக அழிக்க ராஜபக்சாக்கள் திரும்ப வர வேண்டும் எனவும் சுவாமி தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment