சு.கவுடனான பேச்சுவார்த்தைகளில் 'நம்பிக்கையில்லை': GL விசனம் - sonakar.com

Post Top Ad

Thursday, 11 April 2019

சு.கவுடனான பேச்சுவார்த்தைகளில் 'நம்பிக்கையில்லை': GL விசனம்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடனான பேச்சுவார்த்தையில் தாம் நம்பிக்கையிழந்து வருவதாக தெரிவிக்கிறார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பினாமித் தலைவர் ஜி.எல். பீரிஸ்.ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் சுதந்திரக் கட்சிக்கு புதிதாக எழுந்திருக்கும் சந்தேகம் மற்றும் பட்ஜட் வாக்கெடுபில் கலந்து கொள்ளாமை போன்ற விடயங்கள் இரு தரப்புக்கிடையிலும் விரிசலை உருவாக்கியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்க்கும் கூட்டணியெனும் அடிப்படையில் இயங்குவதாக இருந்தால் முழு மனதுடன் எதிர்க்க வேண்டும் எனவும் ஜி.எல் மேலும் தெரிவிக்கிறார்.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்ரி அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பெரமுன தரப்பு அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து வரும் நிலையில் பெரும்பாலும் இரு தரப்பு கூட்டணி சந்தேகம் எனவும் கருத்து வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment