
30 வருடங்களாக சூடானின் ஆட்சியாளராகத் திகழ்ந்து வந்த ஒமர் அல் பஷீரின் ஆட்சி இராணுவப் புரட்சியூடாக கவிழக்கப்பட்டுள்ளது.
பஷீரை சிறைப்படுத்தியுள்ள இராணுவம், அடுத்த மூன்று மாதங்களுக்கு அவசர கால சட்டத்தை அறிவித்துள்ளதுடன் இரண்டு வருடங்களுக்கு தற்காலிக அரசு ஆட்சிபுரியும் எனவும் அதனையடுத்து தேர்தல் நடாத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.
1989 முதல் ஆட்சியதிகாரத்தில் இருந்து வந்த பஷீருக்கு எதிராக கடந்த பல மாதங்களாக அங்கு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment