அந்த துரோகத்தை விட 'பெரிய' பாவமா செய்து விட்டோம்: தயாசிறி கேள்வி! - sonakar.com

Post Top Ad

Thursday, 11 April 2019

அந்த துரோகத்தை விட 'பெரிய' பாவமா செய்து விட்டோம்: தயாசிறி கேள்வி!


கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதியினால் பிரதமர் ரணில் பதவி நீக்கப்பட்டதும் உடனடியாக கட்சிக் கட்டுப்பாட்டிலிருந்து விலகி 50 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்ததை விட பட்ஜட் வாக்களிப்பில் கலந்து கொள்ளாதது பெரிய பாவமா? என கேள்வியெழுப்பியுள்ளார் சு.க செயலாளர் தயாசிறி ஜயசேகர.


வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதன் மூலம் அரசைக் கவிழ்ப்பதற்கு எதிர்பார்த்திருந்த மஹிந்த அணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பங்களிப்பில்லாமை தொடர்பில் தொடர்ந்தும் விசனம் வெளியிட்டு வருகிறது.

இது தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பிய தயாசிறி, கட்சியின் விதிகளுக்கும் கால சூழ்நிலைக்கும் தேவையான நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment