இறுதி வாக்கெடுப்பிலும் ஏமாற்றினால் பார்ப்போம்: GL விசனம் - sonakar.com

Post Top Ad

Monday 1 April 2019

இறுதி வாக்கெடுப்பிலும் ஏமாற்றினால் பார்ப்போம்: GL விசனம்



வரவு-செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பது ஊடாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை மீண்டும் கவிழ்க்க முடியும் எனும் நம்பிக்கையில் காத்திருக்கும் பெரமுனவினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நடவடிக்கைகள் மீது அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.



இரண்டாவது வாசிப்பின் போது ஸ்ரீலசுக கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்வதைத் தவிர்த்திருந்த நிலையில் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

பெரமுன - சு.க இடையேயான நட்பு தொடர்ந்தும் இணக்கப்பாடின்றி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் முன் கூட்டியே பெரமுன சார்பு நடவடிக்கைகளை 'நம்பி' செய்ய முடியாது என சு.க தரப்பு மறுத்து வருகிறது. சுதந்திரக் கட்சி சார்பில் மைத்ரிபால சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பெரமுன தரப்பில் கோட்டாபேயின் பெயர் முன் மொழியப்பட்டு வரும் நிலையில் இழுபறி தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment