மூன்றரை மாதங்களுக்குள் என்னால் முடிந்தது: மைத்ரி பெருமிதம்! - sonakar.com

Post Top Ad

Monday, 1 April 2019

மூன்றரை மாதங்களுக்குள் என்னால் முடிந்தது: மைத்ரி பெருமிதம்!சட்ட,ஒழுங்கு அமைச்சைத் தனது பொறுப்பின் கீழ் எடுத்து மூன்றரை மாதங்களுக்குள் பாரிய தொகை போதைப் பொருளைக் கைப்பற்றியுள்ளதோடு அதில் ஒரு தொகுதியை பகிரங்கமாக அழிக்கவும் தன்னால் நடவடிக்கை எடுக்க முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


அபிவிருத்தியடைந்த நாடுகளில் போன்று போதைப்பொருளை கண்டுபிடிக்கும் நவீன இயந்திரங்களின் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் அவற்றைக் கொள்வனவு செய்வதற்கும் தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்ற அவர், தமது நடவடிக்கை மேலும் தொடரும் என தெரிவித்துள்ளார்.

கூட்டாட்சியின் முதல் மூன்று வருடங்களில் சட்ட-ஒழுங்கு ஐக்கிய தேசியக் கட்சியின் வசம் இருந்திருந்த நிலையில் கடந்த ஒக்டோபர் அரசியல் பிரளயத்தின் பின்னர் அப்பொறுப்பினை ஜனாதிபதி தன் வசம் வைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment