தாக்குதல் விசாரணையில் FBI - இன்டர்போல் - அவுஸ்திரேலிய பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Tuesday 23 April 2019

தாக்குதல் விசாரணையில் FBI - இன்டர்போல் - அவுஸ்திரேலிய பொலிஸ்!


ஞாயிறு தினம் கொழும்பு - நீர்கொழும்பு - மட்டக்களப்பு உட்பட்ட நகரங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் சர்வதேச தீவிரவாத அமைப்புகள் தொடர்புபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் அமெரிக்காவின், இன்டர்போல் மற்றும் அவுஸ்திரேலிய பொலிசார் விசாரணைகளில் பங்களிக்கவுள்ளனர்.



அதிகாரிகள் ஏலவே இலங்கை வந்துள்ள நிலையில் இன்டர்போல் அதிகாரிகள் நாளை வருகை தரவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ மக்களின் முக்கிய வழிபாட்டு நாளில் இடம்பெற்ற குறித்த தாக்குதலை கிழக்கிலங்கை, காத்தான்குடி முகவரியோடு உருவான தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பே நடாத்தியதாக சந்தேகிக்கப்படுகின்ற அதேவேளை இவ்வமைப்போடு தொடர்புபட்டவர்கள் பலர் தற்சமயம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆயினும், இலங்கையைச் சேர்ந்த அமைப்பொன்று இத்தனை துல்லியமாக இவ்வாறான தாக்குதல்களை நடாத்தியிருக்க முடியாது எனவும் சர்வதேச அமைப்புகளின் தொடர்பிருப்பதாகவும் அரச கருதுகின்ற நிலையில் இவ்வாறு வெளிநாட்டு நிபுணர்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment